Tuesday 16 August 2011

புத்தரின் பொன்மொழிகள்

புத்தரின் பொன்மொழிகள்

1 .தர்ம சிந்தனைகள் மனதிலிருந்து உதயமாகிறது. தர்ம சிந்தனைகளே         மனமாகிறது . தீய சிந்தனைகளும் தீய செயல்களும்,  இழுத்துச் செல்லும்  எருதுகளைப்  பின்தொடர்ந்து செல்லும்  வண்டியைப் போல , அவனுக்கு துன்பத்தையேத் தரும்.

2 . தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்.

3 . ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான் .
     ஒருவன் என்னை அடித்தான்.
     ஒருவன் என்னை வெற்றி கொண்டான்.
     ஒருவன் என் பொருளை கவர்ந்து சென்றான் "
    என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய ப கைமை ஒருபோதும் தணியாது.

4 . பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. அன்பினால் மட்டுமே பகைமையை தணிக்க முடியும்.

5 . கலகம் செய்ய விரும்புவோர் தாங்கள் ஒரு நாள் அழிந்து போவோம் என்பதை அறிவதில்லை. அறிந்தவர்கள் கலகம் செய்வதில்லை.

6 . வெகு விரைவிலேயே அந்தோ! இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்சிகளற்ற மரக்கட்டையைப்  போல ஒதுக்கித்  தள்ளப்படும்

7 .  வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.

8 .  சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் பிற சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.

9 .  மற்றவர்களின் குற்றங்களை மற்றவர்கள் செய்தது பற்றியும் அவர்கள் செய்யாததைப்பற்றியும் கவலைப் படாமல்,   தான் என்ன செய்யப்போகிறோம் என்ன செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பதைப் பற்றியே கவலைப்பட வேண்டும்.
10 . தன்னைவிட மேலான அல்லது  தன்னைப் போன்ற அறிவுள்ள நண்பர்களை ஒருவன்  அடைய முடியாவிட்டால்  அவன்  தனந்தனியே உறுதியாகச் செல்லட்டும் , மனம்  பண்படாத மனிதர்களிடமிருந்து உதவி கிடைக்காது.
11 . தீயவர்களுடன் நட்பு கொள்ளாதே! தரம் தாழ்ந்த மனிதனுடன் பழகாதே, நல்லவர்களுடன் பழகு சிறந்தவர்களுடன் பழகு.
12 . தனக்காகவும்  மற்றவர்களுக்காகவும் மக்கட்பெற்றையும் நிலத்தையும், செல்வத்தையும் விரும்பக்கூடாது அதர்ம வழியில் வாழ்வில் முன்னேற ஆசைபடக்கூடாது, தர்ம வழியில் செல்பவன் நல்ஒழுக்கத்துடன் அறிவாளியாகத் திகழ்வான் .   

1 comment: