Tuesday 16 August 2011

காமத்தை கட்டுபடுத்த

காமத்தை கட்டுபடுத்த

     காமத்தை தூண்டக்கூடிய செயல்கள் நடக்கும் இடம், காமத்தை தூண்டும் விதம், பேசும் நபர்கள் நிகழ்சிகள், போன்றவை  நம் அனுமதி இன்றி நம்முள் செல்வது, அது மாதரி சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்தாமல் இருப்பதும், காம உணர்வை தூண்டும் உணவு வகைகளை தவிர்ப்பதும், காமத்தின் பாதிப்பை நம் மனதில் அதிகம் ஏற்படுத்தாமல் தவிர்க்கும்.

    காமத்தை அதிகம் தூண்டும் உணவுகளான வெங்காயம் பூண்டு, மாமிசம், முருங்கை கீரை, காய், முள்ளங்கி, உப்பு, காரம் போன்றவற்றை குறைத்தால் மிகவும் நல்லது, மேலும் காமத்தால் குழந்தையை  உற்பத்தி செய்ய முடியுமே ஒழிய திறமையை விருத்தி செய்ய முடியாது, எனவே காமம் என்பது உலகில் உள்ள இன்பங்களில் மிகவும் அற்ப சொற்ப நொடிகளே இருக்கும் ஒரு உயிர் மனம் உடம்பை கெடுக்கும் செயலாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

                  ஓர் உயிர் உற்பத்தி ஆகவே மூலகாரணமாக இருப்பது காமம் தானே, ஆனால் உற்பத்தியான ஒவ்வொரு உயிரும் தனிப்பட்ட  முறையில் மரண அவஸ்தை அடைவதற்கு காரணம் காமம்தானே இருக்கிறது எனவே காமத்தை நம் கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்

          எளிமையான உணவுகளால் காமத்தின் வலிமையை குறைத்துக் கொள்ளாமே ஒழிய காமத்தை அழிக்க முடியாது.



காமத்தால்   ஏற்படும் பாதிப்புகள்

1 . நாம் தலை குனியும்  சூழ்நிலை காமத்தால் மட்டுமே எளிதில் உருவாகும்.

2 . அனைத்தையும் இழந்து, நாம் அடையும் காமமெனும் அற்ப சுகத்தை நாம் இழப்பது தவறில்லை.

3 . நொடி நேர சுகம் தருமே நெடுந்தூர கவலை.

4 . நொடி நேரம் தீர்க்கமாக முடிவெடுத்தால் காமத்தை ஜெயித்து விடலாம் தற்காலிகமாக.

5 . காமம் என்பது கண நேர சுகம் என்பதை அறிந்து அனைவரும் அந்த கண நேர சுகத்திற்காக உயிரையும் அதற்கு ஒப்பான மானத்தையும் விடத் தயாராக இருப்பது பலமா? சாபமா?
.
6 . காமத்தால் ஜென்மம் எடுத்து, காமத்தாலேயே இலிஜென்மம்  என்று பெயர் எடுக்க வேண்டுமா?

         காமத்தை ஜெயிப்பது எளிது காமத்தின் தொடர்ச்சிகளையும், அதன் விளைவுகளையும் அதன் நிரந்தர தன்மையையும் ஒரு நொடி யோசித்தால் போதும் வந்த காமம் போன இடம் தெரியாது.



No comments:

Post a Comment