Friday 19 August 2011

.குரு நானக் உபதேசம்

குரு நானக் உபதேசம்
எபோதும் இறைவன் நினைப்பிலே தோய்ந்து இருங்கள்,
நேர்மையைக் கடைபிடியுங்கள்
பாடுபட்டு உழைத்துப் பொருட்களை ஈட்டுங்கள்
இவன் இந்து முஸ்லிம் என்ற வேற்றுமைக்கு இடம் கொடுக்காமல் எல்லோரும் இறைவனுடைய பிள்ளைகள் என்ற கருத்தில் மனிதாபிமானத்துடன் ஒற்றுமையாக வாழுங்கள் என்று உபதேசம் செய்தார்.

அரசன் தவறு செய்தாலும் அதை எடுத்துக்காட்டித் திருத்த வேண்டும், பயந்து ஒதுங்கிப் போதல் கூடாது.

பணிவு சொல்லாகவும் , பொறுமை நற்குணமாகவும், இனிமையான பேச்சும், மரியாதையான நடத்தையும், வசிய மருந்தாகவும் கொண்டு ஒரு பெண் நடந்து கொள்வாளேயானால் ஆடவனை வசீகரிப்பதில் அவளுக்கு எவ்விதச் சிரமமும்
இருக்காது இப்படி நடந்து கொள்ளும் நாயகியை விட்டு, நாயகன் விலகப் பிரியப்படமாட்டான் என்று குருநானக்  விவரித்தார் .
 

No comments:

Post a Comment