Thursday 18 August 2011

காலத்தின் கலைஞன்

எம்.ஆர்.ராதா நடித்து பரபரப்பாக பேசப்பட்டு தடை செய்யப்பட்ட ராமாயணம் நாடகம் இந்தப் பாடலுடன்தான் துவங்கப்பட்டது .

பாடல்
         அமுதெனும் நமதொரு தமிழ்மொழி வாழ்க!
         ஆதி திராவிடமானது வாழ்க
         இயல் இசை நாடக இயல் மொழி வாழ்க!
         ஈன்ற தாய்மொழி இன்மொழி வாழ்க!
         உயர் உறும்களை பல உதவும் சொல் வாழ்க
         உயிர் மெய் உறவே மருவும் உறைபோல்,
        உலகினில் நிறைபெறவே உலகினில் நிறைபெறவே
        உலகினில் நிறைபெறவே 

 எண்பத்தி முன்று வயதனாலும் . இன்னும் ராதா அண்ணனின் நினைவு மனதில் பசுமையாக ஒரே ஒரு சம்பவம்.
கண்ணகி படத்திற்கெல்லாம் வசனம் எழுதியவரான இளங்கோவன் , ஸ்டுடியோவிற்கு இவரைப் பார்க்க வந்திருந்தார்,எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை.

மறுநாள் என்னைக் கூப்பிட்டு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார் இதைபோய்ப் இளங்கோவனிடம் கொடுத்துவிட்டு வா என்றதும் காரில் கிளம்பியதும்  தடுத்து நிறுத்தி உனக்கு இளங்கோவனைத் தெரியுமா என்றார்? நன்றாகத் தெரியும் என்று சொன்னேன உடனே பணத்தை வாங்கிவிட்டு இன்னொருவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டார் எனக்குத் இதில் கோபம். முகமாற்றத்தை கவனித்துப் பிறகு கேட்டபோது சொன்னார், இளங்கோவன் எப்படி இருந்தார்னு உனக்குத் தெரியும்லாஅவர் வசனத்தில் ஒரு வரியை மாற்றகூடத் தயங்குவார்கள், அப்படி ஓகோன்னு இருந்தவரோட வீட்டை ஜப்தி பண்ணப் போறாங்க பணம் கேட்டார் கொடுத்துவிட்டேன் பணத்தை வாங்கும்போது அவருக்கு முன்பே அறிமுகம் ஆனவரிடம் வாங்கினால் அவர் என்ன நினைப்பார்? அதனாலேதான் உன்னை  அனுபாமல் அவருக்குத் தெரியாத இன்னொருவரிடம் கொடுத்து அனுப்பினேன் என்றார்.

   உதவுவதில் கூட பிறருடைய மனம் புண்பட்டுவிடக்  கூடாது என்பதில் எவ்வளவு  கவனமாக இருந்திருக்கிறார் நெகிழ்கிறார் முதியவரான கஜபதி

No comments:

Post a Comment