இரண்டு ஜென் இரண்டு ஜென் துறவிகள் ஒரு சாயங்காலம் மடத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.நல்ல மழை பெய்திருந்ததால் எங்கும் நீர் குட்டைகளாகக் காணப்பட்டது.அப்போது அழகான பெண் ஒருத்தி நீர் குட்டைகளின் காரணமாக ரோட்டைக் கடக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.இரண்டு பேரில் மூத்த துறவி அவளின் கையினைப் பிடித்து ரோட்டை கடக்க உதவி செய்தார்.
மடம் வந்தடைந்த பின் இளைய துறவி மூத்த துறவியிடம் "ஐயா துறவிகளான நாம் பெண்களை தொடக்கூடாதல்லவா", "ஆம்" என்றார் மூத்த துறவி."அப்படியானால் நீங்கள் அந்தப்பெண்ணை தொட்டு ஏன் ரோட்டை கடக்க வைத்தீர்கள்" என்று வினவினார் இளைய துறவி.அதற்கு மூத்த துறவி சிரித்துகொண்டே சொன்னார் "நான் அவளை ரோட்டின் கரைக்கு அப்போதே கடத்திவிட்டேன் நீ இன்னும் அவளை சுமந்து கொண்டிருக்கிறாய்"
No comments:
Post a Comment