Tuesday, 9 August 2011

ஓஷோவின் குட்டி கதைகள்-7

ஓஷோவின் குட்டி கதைகள்-7


கணக்கு ஆசிரியர், பையனிடம் ஒரு கணக்கு சொன்னார்.

தம்பி உன் தந்தை முன்னூறு டாலர் கடன் வாங்குகிறார் என்று வைத்து கொள். வாரத்திற்கு பதினைந்து டாலர் திருப்பி கொடுப்பதாக வாக்களிக்கிறார். பத்து வாரங்களுக்கு பிறகு எவ்வளவு பாக்கி இருக்கும் என்றார்.

முன்னூறு டாலர்கள் என்றான் பையன்.

உனக்கு கணக்கு தெரியவில்லை என்றார் ஆசிரியர்.

உங்களுக்கு என் அப்பாவை தெரியவில்லை என்றான் பையன்.

No comments:

Post a Comment