Tuesday, 9 August 2011

ஓஷோவின் குட்டி கதைகள்-3

ஓஷோவின் குட்டி கதைகள்-3


ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும்
காண்பிப்பாயாக என்று ஏசுநாதர் சொல்லுகின்றார் என்று
ஒரு கிறிஸ்துவ துறவி போதனை செய்தார்.

இதை கேட்டு கொண்டிருந்த ஒருவன் உண்மை தானா என்று அந்த துறவியையே பரிசோதிக்க விரும்பினான்.

அவர் கன்னத்தில் அறைந்தான்.

உண்மையான அந்த துறவி மறு கன்னதையும் காட்டினார்.

அவன் தன் வலு முழுவதும் கூட்டி மறு கன்னத்திலும் அறைந்தான்.

உடனே அவனை பாய்ந்து பிடித்த துறவி செம்மையாக உதைக்க தொடங்கினார்.

வலி தாங்க முடியாமல் அலறியபடி அவன் கேட்டான்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்?இன்று காலையில் தானே ஒரு கன்னத்தில் ஒருவன் அறைந்தால் மறு கன்னத்தையும் அவனுக்கு காட்டு என்று உபதேசம் செய்தீர்கள்?

துறவி சொன்னார்:

ஏசு மறு கன்னத்துடன் நிறுத்திவிட்டார். மறு கன்னத்திலும் அறைந்தால் என்ன செய்வது என்று சொல்லவில்லை.அதை நம்முடைய விருப்பத்துக்கு விட்டுவிட்டார்.

No comments:

Post a Comment