Tuesday, 9 August 2011

ஓஷோவின் குட்டி கதைகள்-2



ஓஷோவின் குட்டி கதைகள்-2


பண்ணையில் பணியாற்றும் ஒரு தொழிலாளிக்கு அவன் வீட்டிலிருந்து தந்தி வந்தது.

தந்தியில் வாசகம் அவனது மனைவி நான்கு குழந்தைகள் பெற்றுள்ளதாக சொல்லிற்று.

எனவே பண்ணை வேலையை விட இன்னும் அதிக வருமானமுள்ள வேறு வேலை ஒனறை தேட வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.

பல தொழிலகங்களுக்கு அவன் விண்ணப்பித்தான்.ஒரு தொழிலகத்திலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

வேலையில் நியமிக்கும் நிறுவனத்தின் அதிகாரி அவனிடம் கேட்டார்.

உனக்கு பொருள்களை விற்பனை செய்யும் தகுதி உள்ளதா?தட்டச்சு தெரியுமா?கம்யூட்டரை இயக்க தெரியுமா?

அவன் மிகவும் வருத்தத்துடன் ஒவ்வொரு கேள்விக்கும் தெரியாது என்றே கூறினான்.

அப்படியானால் உன்னால் என்னதான் செய்ய முடியும்?என்று அதிகாரி கேட்டார்.

உடனே அவன் தன் பையில் வைத்திருந்த தந்தியை எடுத்து காட்டி,இதில் தெளிவாக உள்ளது;படித்து பாருங்கள் என்றான்.

No comments:

Post a Comment